Site icon TNPSC Academy

TNPSC TAMIL Current Affairs mar 17, 2017

TNPSC TAMIL Current Affairs mar

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC TAMIL Current Affairs mar 17, 2017 (17/03/2017)

 

Download as PDF

தலைப்பு : அரசியலறிவியல் – பொது நிர்வாகம், மாநிலங்களின் விவரங்கள் மற்றும் தேசியம்

தமிழ்நாடு தனது மாநில திட்டக்குழுவினை மாற்றுகிறது

தமிழ்நாடு அரசு, தனது மாநிலத் திட்டக்குழுவினை வளர்ச்சிக் கொள்கை சபை என மாற்ற முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் திட்டம் மற்றும் திட்டமற்ற ஒதுக்கீடுகளில் மத்திய அரசின் உடன்பாடான அணுகுமுறையின் மூலம் இதற்கிடையில் எந்தவித வேறுபாடு இல்லாமல் செய்வதே இதன் நோக்கம் ஆகும்.

இந்த மாற்றம், மாநில நிதி அமைச்சர் டி ஜெயக்குமார் மூலம் அவர்கள் மாநில சட்டமன்றத்தில் தனது வரவு செலவுத் திட்ட வழங்கல் போது அறிவிக்கப்பட்டது.

மாநில அரசு, மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது.

அது வரவு-செலவுத் திட்ட செயல்முறைகளை எளிமைப்படுத்தவும் மற்றும் செலவினத்தை கட்டுப்படுத்தும் முறைகளில் உறுதியாக கவனம் வைக்கவும் வழிவகை செய்கிறது.

_

தலைப்பு : அரசியலறிவியல் – பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்

தேசிய சுகாதார கொள்கை 2017 – National Health Policy

தேசிய சுகாதார கொள்கையின் வரைவு மசோதாவின் நகலை பங்குதாரர்களின் மத்தியில் விநியோகிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு  பிறகு தேசிய சுகாதார கொள்கை 2017 ற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்பு 2002 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு இருந்த இக்கொள்கை முந்தைய கொள்கைகளுக்கு மாற்றாக புதிய கொள்கையாக பொதுமக்கள், மாநில அரசுகள் மற்றும் அனைத்து தரப்பினரிடமும் பரிந்துரைகளை பரிசீலித்து பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% பொது சுகாதார செலவினை படிப்படியாக அதிகரிக்க உதவுகிறது.

இது ஆரம்ப சுகாதாரத்தில் கவனம் செலுத்துகிறது:

இந்த கொள்கை மூன்றில் இரண்டு (அல்லது அதற்கு மேற்பட்ட) வளங்களை முதன்மை பாதுகாப்பிற்கு ஒதுக்கீடு செய்தல்.

1000 மக்களுக்கு இரண்டு படுக்கைகள் என்ற வீதம் ஆபத்தான நேரங்களில் (படுகாயமுற்ற முதல் ஒரு மணிநேரம்) அணுகலை எளிமைப்படுத்துதல்.

முக்கிய இலக்குகள்:

பிறப்பு ஆயுட்காலத்தினை 2025 ஆம் ஆண்டிற்குள் 67.5 முதல் 70 வரை அதிகரித்தல்.

2019 ஆம் ஆண்டிற்குள் குழந்தை இறப்பு விகிதத்தை 28 ஆக குறைத்தல்.

2025 ஆம் ஆண்டிற்குள் ஐந்து வயது குழந்தை இறப்புகளை 23ற்கும் கீழ் குறைத்தல்.

2025 ஆம் ஆண்டிற்குள் இதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு அல்லது நாள்பட்ட சுவாச நோய்கள் போன்றவற்றின் மூலம் ஏற்படும் அகால இறப்புகளை 25% ஆக குறைத்தல்.

_

தலைப்பு : வரலாறு – சமீபத்திய நிகழ்வுகள்

இந்தியா உலகின் பழமையான ஆல்கா படிமங்களை கொண்டுள்ளது

சிவப்புப் பாசியை கொண்டிருக்கும், 1.6 பில்லியன் வயதான படிமங்களின் ஒரு ஜோடியை இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட மிக பழமையான படிமம் ஆகும்.

இதற்கு முன்னர் வரை, மிகப் பழமையான சிவப்புப் பாசி 1.2 பில்லியன் வயது கொண்டிருந்தது.

மத்திய இந்தியாவில் சித்ரகூட் என்ற பகுதியில் இந்த படிமங்கள் பாறைப்படிவுகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

_

தலைப்பு : வரலாறு – புதிய நியமனங்கள், யார் யார்?

SAIன் புதிய உறுப்பினர் – ஜ்வாலா குப்தா (Jwala Gupta)

இந்தியாவின் பூப்பந்து வீரர் ஜ்வாலா குப்தா, இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI – Spors Authority of India) ஆளுகைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜ்வாலா குப்தா பற்றி:

14 முறை தேசிய சாம்பியன் மற்றும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஜ்வாலா குப்தா, 2011 உலக சாம்பியன்சிப் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றார்.

அவர் ஒரு 2010 தில்லி காமன்வெல்த் சாம்பியன் மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவில் 2014 கிளாஸ்கோ விளையாட்டுப் போட்டிகளிலும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

_

தலைப்பு: வரலாறு – விருதுகள் மற்றும் மரியாதைகள்

அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்ற அறிவியல் விருதை வென்று இந்திய மாணவி சாதனை படைத்துள்ளார்

அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக, ‘ரீஜெனரன் சயின்ஸ் டேலன்ட் சர்ச்(Regeneron Science Talent Awards) என்ற பெயரில் ஆண்டுதோறும் ஒரு போட்டி நடைபெறுகிறது.

அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட இந்தப் போட்டி, அந்நாட்டின் மிகவும் பழமையான, புகழ்பெற்றதாகும்.

மற்றும் இது “ஜூனியர் நோபல் பரிசு” என்றழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான போட்டியில் முதல் 10 இறுதி போட்டியாளர்கள் பட்டியலில் 5 இந்திய வம்சாவளி மாணவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இந்திராணி (Indraani):

இதில் நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த இந்திராணி தாஸ் (17) முதலிடம் பிடித்தார். இதன்மூலம் இவருக்கு சுமார் ரூ.1.67 கோடி மதிப்பிலான விருது கிடைத்தது.

மூளை காயம் அல்லது நரம்பு மண்டல நோய் காரணமாக நரம்பு அணுக்கள் இறப்பதைத் தடுப்பது குறித்து ஆராய்ச்சி செய்ததற்காக இந்தப் பரிசு கிடைத்துள்ளது.

அர்ஜுன் (Arjun Ramani):

மற்றொரு இந்திய-அமெரிக்க அர்ஜுன் ரமணி $ 1,50,000 மதிப்புள்ள மூன்றாவது பரிசினை வென்றார்.

அர்ஜுன் தனது கணித துறையில் வரைபடக் கோட்பாட்டிலும் கணினி ப்ரோக்ராம்மிங்கிற்காகவும் இவ்விருதை வென்றார்.

அர்ச்சனா வர்மா (Archana Verma):

இந்திய-அமெரிக்கர் அர்ச்சனா வர்மா, சூரிய சக்தியின் வளர்ச்சிக்கு வழிவகுத்திட முடியும் என தனது ஆராய்ச்சிக்காக $ 90,000 மதிப்புள்ள பரிசினை வென்று ஐந்தாவது இடத்தை பெற்றார்.

பிரதிக் நாயுடு (Prathik Naidu):

இந்திய-அமெரிக்கர் பிரதிக் நாயுடு, மனித மரபுத்தொகுதிகள் மற்றும் புற்றுநோய் பற்றி படிக்க உதவும் ஒரு மென்பொருளை உருவாக்கியதற்காக $ 70,000 மதிப்புள்ள பரிசினை வென்று ஏழாவது இடத்தினை பெற்றார்.

விருந்தா மதன் (Vrindha Madhan):

இந்திய-அமெரிக்கர் விருந்தா மதன், மலேரியாவுக்கான மருந்தளிப்புகள் பற்றிய அவர் படிப்பிற்காக $ 50,000 பரிசினை பெற்று ஒன்பதாம் இடத்தினை வென்றார்.

[/vc_column_text][vc_column_text]

For more TNPSC TAMIL Current Affairs mar and in English visit : www.tnpsc.academy/current-affairs

Subscribe our Newsletter to get Daily TNPSC TAMIL Current Affairs mar and inEnglish on your Inbox.

 

Read TNPSC TAMIL Current Affairs mar and in English. Download daily TNPSC TAMIL Current Affairs mar and in English.

Monthly compilation of TNPSC TAMIL Current Affairs mar and in English as PDF – https://www.tnpsc.academy/current-affairs/download-tnpsc-current-affairs-compilation-in-pdf/

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version