[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs april 13, 2017 (13/04/2017)
Download as PDF
தலைப்பு : உலக அமைப்பு, இந்திய வெளியுறவு கொள்கை
G20 டிஜிட்டல் அமைச்சர்களின் சந்திப்பு
ஜெர்மனியிலுள்ள டூஸெல்டார்ஃப் (Dusseldorf) நகரில் ஜி 20 டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
“ஒரு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகளாவிய வடிவமைப்பை உருவாக்குதல்” என்ற பிரகடனத்துடன் இந்த சந்திப்பு முடிவடைந்தது.
G20 பற்றி:
பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்ஸிகோ, சவுதி அரேபியா, ரஷ்யா, துருக்கி, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய இராச்சியம், யு.எஸ். மற்றும் ஐரோப்பா யூனியன் போன்ற நாடுகள் அதன் உறுப்பினர்களில் அடங்கும்.
சீனாவில் 2016 ல் ஹாங்க்ஜோவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் நிறுவப்பட்ட டிஜிட்டல் பொருளாதாரத்தின் அடிப்படையில் இந்த G20 பேச்சு வார்த்தை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது.
தலைப்பு : விருதுகள் மற்றும் சாதனைகள்
இந்தியாவின் ஜனாதிபதி தேசிய புவிசார் விருதுகளை 2016 வழங்கியுள்ளார்
ஏப்ரல் 12, 2017 அன்று, ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற ஒரு விழாவில் இந்திய ஜனாதிபதி, ஸ்ரீ பிரணாப் முகர்ஜி 2016ம் ஆண்டிற்கான தேசிய புவியியல் அறிவியல் விருதுகளை வழங்கினார்.
இதில், 2016 ஆம் ஆண்டிற்கான இளம் விஞ்ஞானி விருது கோவாவை சேர்ந்த டாக்டர் அபிஷேக் சஹா (Abhisek Saha), அவர்களுக்கு கிடைத்தது.
இந்த விருதுகள் பற்றி:
தேசிய புவிசார் விருதுகள், சுரங்கத் துறை அமைச்சகத்தின் மூலம் புவிசார் விஞ்ஞானிகளின் பங்களிப்பு மற்றும் ஆண்டுகணக்கான அவர்களின் பணிக்காக அவர்களை கௌரவப்படுத்த வழங்கப்படுகிறது.
கடந்த ஐந்து தசாப்தங்களாக, புவிசார் அறிவியல் துறையில் மிகவும் விரும்பப்பட்ட அங்கீகாரமிக்க விருதுகளாக இந்த விருதுகள் வெளிப்பட்டுள்ளன.
இவ்விருதுகள் விஞ்ஞானிககளை உயர்தர உயரங்களை அடைவதற்கு ஊக்கப்படுத்த வழங்கப்படுகிறது.
தலைப்பு : உலக அமைப்பு, இந்திய வெளியுறவு கொள்கைகள்
இந்தியா-ஆஸ்திரேலியா நாடுகள் மும்பையில் கிரிக்கெட் போட்டிகளில் ஒத்துழைப்பிற்காக ஒப்பந்தம்
இரு நாடுகளுக்கும் விளையாட்டுகளில் ஒத்துழைப்பினை அதிகரிப்பதை இலக்காகக் கொண்டு இந்தியா மற்றும் ஆஸ்ட்ரேலியா மும்பையில் ஸ்போர்ட்ஸ் ஒத்துழைப்பு ஒன்றினை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த கூட்டுப்பணியானது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் முன்னிலையில், இளைஞர் நல மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் மற்றும் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி மால்கம் டர்ன்பல் ஆகியவர்கள் மூலம் தொடங்கப்பட்டது.
முக்கிய குறிப்புகள்:
இது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை நான்கு பிரிவுகளில் ஒத்துழைக்கும் – அவையாவன :
தடகள மற்றும் பயிற்சியாளர் பயிற்சி மற்றும் வளர்ச்சி
விளையாட்டு அறிவியல்
விளையாட்டு ஆளுமை மற்றும் நேர்மை
அடிமட்ட மக்களுக்கும் பங்கு.
_
தலைப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள்
BRABO – இந்தியாவின் முதன்முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரோபோ
டாட்டா மோட்டார்ஸ் TAL உற்பத்தி தீர்வுகள் (TAL Manufacturing Solutions of Tata Motors), ஏப்ரல் 11, 2017 அன்று இந்தியாவின் முதல் தொழில்துறை ரோபோவை வெளிக்கொண்டு வந்துள்ளது.
இதற்க்கு “BRABO” என பெயரிடப்பட்டுள்ளது.
BRABO பற்றி:
BRABO ஆனது,மனிதனின் உழைப்பை பூர்த்தி செய்வதற்கும் முடிந்த தயாரிப்புகளின் பேக்கேஜிங் செய்ய மூலப்பொருள் கையாளுதலில், திரும்பத்திரும்ப செயல்களை செய்தல், அதிக அளவு, ஆபத்தான மற்றும் குறைந்த நேரத்தை மட்டுமே செலவிடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது முதல் முறையாக ஒரு தொழில்துறை ரோபோவாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது 15 முதல் 18 மாதங்கள் திருப்பி செலுத்தும் காலத்துடன், இது 15-30% உற்பத்தி திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[/vc_column_text][/vc_column][/vc_row]