www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Sep.8, 2016 (08/09/2016)
காஷ்மீரில் பேச்சுவார்த்தை
அணைத்து கட்சி ஆணையம் ஜம்மு & காஷ்மீரை பார்வையிட்டது. மேலும் அவ்வாணையம் ஒருங்கிணைத்து ஒரு அறிக்கை வெளிட்டுள்ளது. அவ்வறிக்கையில் காஷ்மீர் மாநில பேச்சுவார்த்தைக்கு அனைவரையும் கொண்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய மற்றும் மாநில அரசுக்கும் மற்றும் காஷ்மீர் மக்கள் வன்முறை வழிகளை கைவிட்டு பேச்சவார்த்தைக்கு வரும் படி வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இவ்வாணையம் மத்திய அமைச்சரான ராஜ்நாத் சிங் அவர்களை தலைமையாக கொண்டு செயல் படுகிறது.
இணையதளங்களில் FIR வெளியிடு
FIR போடப்பெற்ற 24 -ங்கு மணிநேரத்திற்குள் அந்த FIR-ஐ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமற்றம் அணைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதம் , பாலியல் வன்முறை, குழந்தைகள் கொடுமை ,கிளர்ச்சி ஆகிய வழக்குகள் மக்கள் பாதுகாப்பு கருதி விளக்கு பெற்றுள்ளது.
ரயில்களில் Flexi fare சேவை
ராஜதானி, துறந்தோ, சதாபி ஆகி ரயில்களில், விமானங்களில் பயன்படுத்தப்படும் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவுகளில் Digilocker சேவை
Digilocker என்ற புதிய சேவையை டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவுகளில் இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவுகளை காகித அட்டையில் எடுத்து செல்லாமல் கைபேசிகளில் digilocker app மூலம் எடுத்து செல்லலாம்.
digilocker பற்றி:
digilocker இல் ஒருவர் தன்னை இணைத்துக்கொண்டாள் அவருடை முக்கிய ஆவணங்களுக்கு அவருக்கென்று இணையதளத்தில் பாதுகாக்குமான இடம் ஒன்று அளிக்கப்படும்.அதை அவர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ரயில் விபத்துக்கான இன்சூரன்ஸ்
92 காசில் அரசு ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இன்சூரன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் விபத்து தொகையாக 10 லட்சம் ரூபாய் வரை பெறமுடியும். இதை IRCTC மூலம் டிக்கெட் பதியும் போதே பயணிகள் பிரீமியம் கட்டி இன்சூரன்ஸ் பெறமுடியும்.