Site icon TNPSC Academy

TNPSC Current Affairs in Tamil – Oct.25, 2016

co2 emission

[vc_row][vc_column][vc_column_text]

www.tnpsc.academy – TNPSC Current Affairs in Tamil – Oct.25, 2016

 

Download as PDF

தலைப்பு : சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்

பசுமை வாயுக்களின் CO2 உமிழ்வு தகவல் நிலை

உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, வளிமண்டலத்தில் உலகளவில் கார்பன் டைஆக்சைடின் சராசரி செறிவு புதிய பதிவுகளை அடைந்து உள்ளது. இந்நிகழ்வு முந்தைய ஆண்டின் மில்லியனுக்கு 400 பாகங்களுக்கும் அதிகமாக முதல் முறையாக எட்டியுள்ளது.

ஹவாயில் உள்ள மவுனா லோ-ல், பசுமை வாயுக்கள் கண்காணிப்பு நிலையத்தில் அனுசரிக்கப்பட்டது.

ஆய்வு என்ன கூறுகிறது?

பகுப்பாய்வில் அதன் முந்தைய ஆண்டான 2014-2015 விட அதிகம் வளர்ந்துள்ளது என்று காட்டுகிறது மற்றும் இந்த கார்பன் உமிழ்வு அதே அல்லது அதிக அளவிலேயே இருக்கும் என்றும் மற்றும் பல தலைமுறைகளுக்கு குறைந்த அளவை எட்டாது எனவும் அறிவிக்கிறது.

WMO கூறும் காரணம் என்ன?

எல் நினோவினால் CO2 அளவில் திடீர் வளர்ச்சி 2015 இல் தூண்டப்பட்டதாகவும் மற்றும் 2016-ல் இது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் அறிவித்தது.

இந்த உயர் மட்ட CO2 உமிழ்வின் விளைவுகள் என்ன?

இதன் உமிழ்தல் காரணமாக, வெப்ப மண்டல பகுதிகளில் வறட்சி ஏற்படும் மற்றும் காடுகள் மற்றும் தாவரங்கள் எடுத்துக்கொள்ளும் CO2வின் அளவு குறைக்கப்படும். எனவே வளிமண்டலத்தில் உமிழப்படும் CO2 வளிமண்டலத்திலேயே தங்கி ஒரு முக்கிய காலநிலை மாற்றத்தினை வழிவகுக்து மிக பெரிய ஆபத்தினை விளைவிக்கும்.

WMO பற்றி:

உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு 1950 நிறுவப்பட்டது. இது ஒரு அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிறுவனமாக வானிலை ஆய்வு, செயல்பாட்டு நீரியல் மற்றும் புவியியர்பியல் அறிவியல் தொடர்பான விபரங்களில் உதவுகிறது.

அதன் தலைமையகம் சுவிச்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் உள்ளது. மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி குழு உறுப்பினராக உள்ளது.

உலக வானிலை நாள் ஆண்டுதோறும் மார்ச் 23 ம் தேதி நடைபெறுகிறது.

தலைப்பு : நலத்துறை சார்ந்த அரசு திட்டங்கள்

தேசிய பழங்குடியினர் திருவிழா

பிரதமர் புது தில்லியில் இன்று தேசிய பழங்குடியினர் திருவிழாவினை துவங்கி வைத்தார்.

திருவிழாவின் நோக்கம் :

இந்த திருவிழாவிற்கு முக்கிய நோக்கம், அனைத்து பழங்குடியினர் மத்தியிலும் ஒரு ஒருமைப்பாட்டு உணர்வை ஊக்குவிப்பது ஆகும்.

தலைப்பு : இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளுடனான இருதரப்பு உறவு

மித்ரா சக்தி 2016

இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான கூட்டு இராணுவ பயிற்சியின் நான்காவது பயிற்சி இலங்கையில் உள்ள அம்பேபுஸ்ஸ உள்ள சின்ஹா ரெஜிமெண்டல் மையத்தில் 24 அக்டோபர் முதல் 06 நவம்பர் 2016 வரை நடத்தப்படுகிறது.

இலங்கை இராணுவத்துடனான முந்தைய உடற்பயிற்சி, இந்தியாவில் புனேவில் 2015-ல் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது.

மித்ரா ஷக்தி” தொடர் 2013ல் இருந்து நடத்தப்படும் இந்தியா மற்றும் இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள் மேம்படுத்த நடத்தப்படும் இருதரப்பு பயிற்சிகளில் ஒன்றாகும்.

[/vc_column_text][/vc_column][/vc_row]

Exit mobile version